Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மலை வாழை நேரடி ஏல விற்பனை தொடக்கம்

மலை வாழை நேரடி ஏல விற்பனை தொடக்கம்

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வாழைத்தார்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம்.

பகிரவும் WhatsApp Facebook

மலைவாழை நேரடி ஏல விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்ல சிவன் தொடங்கிவைத்தார்.

மாவட்டத்தின் முக்கிய மலைப்பிரதேசமான ஏலகிரி மலையில் புங்கனூர், நிலாவூர் உள்ளிட்ட 14 கிராமங்களில் பழங்குடியின மக்களால் பாரம்பரியமாக மலைவாழை பயிரிடப்பட்டு வருகிறது. இந்த வாழைப்பழத்திற்கான கிராக்கி அதிகமாக உள்ள நிலையில், விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. 

எனவே, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை சார்பில் மலைவாழை நேரடி ஏல விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதூர் நாடு ஊராட்சியில் நடைபெற்ற தொடக்க விழாவில், முதல் நாளில் 2,000 கிலோ அளவுக்கு மலைவாழை ஏலம் விடப்பட்டது. 

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வாழைத்தார்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு முழுமையான விலையை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ திருப்பதி, திட்ட இயக்குனர் தமிழரசி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தமிழ்நங்கை, துணைப் பதிவாளர் மீனாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி
புத்தக கொள்முதலை விசாரிக்க சிறப்புக் குழு: அமைச்சர் ராஜ்மோகன்
அடுத்த செய்தி
IEA warns of winter gas supply crunch

தொடர்புடைய செய்திகள்